33.6 C
Chennai
May 31, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

43 சவரன் நகையை குப்பையில் வீசி சென்ற பெண்!

குன்றத்தூர் அருகே பெண் ஒருவர் 43 சவரன் நகையை ஏடிஎம் மையத்தில் வைக்கப்பட்டிருந்த குப்பை தொட்டியில் வீசி சென்றுள்ளார். 

சென்னையை அடுத்த குன்றத்தூர் முருகன் கோவில் செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான வங்கி மற்றும் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் காவலாளியாக வேலை செய்துவரும் கோதண்டம் என்பவர் நேற்று காலை ஏடிஎம் மையத்திற்குள் சென்று பார்த்த போது அதில் இருந்த குப்பை தொட்டியில் கைபை ஒன்று இருந்தது. அதனை பிரித்து பார்த்தபோது அதில் நகைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையில் வந்த போலீசார் நகைபையை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் ஏடிஎம் மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது 35 வயதுடைய பெண் ஒருவர் ஏடிஎம் மையத்திற்குள் சென்று கதவை திறந்து குப்பை தொட்டியில் நகைபையை போட்டு விட்டு செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த பெண் யார் என போலீசார் விசாரித்தபோது, குன்றத்தூரை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. 35 வயதுடைய தனது மகளை காணவில்லை என்று அவரது பெற்றோர் வாய்மொழியாக போலீசாருக்கு தெரிவித்த நிலையில் பின்னர் அவர் வீட்டிற்கு வந்து விட்டதாக தெரிவித்திருந்தனர்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை அந்த பெண்ணின் பெற்றோரிடம் காண்பித்த போது அந்த காட்சியில் இருப்பது தனது மகள் என தெரிவித்தனர். அப்போது தான் அவர் 43 பவுன் நகைகளை குப்பை தொட்டியில் போட்டுவிட்டு சென்றது குறித்து போலீசார் அவரது பெற்றோருக்கு தெரிவித்ததையடுத்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து குன்றத்தூர் போலீசார் அந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் வங்கி ஊழியர்களை அழைத்து நகைகளை அவர்களிடம் ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த பெண் சற்று மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும், தூக்கத்தில் எழுந்து நடந்து வரும் போது வீட்டில் இருந்த நகையை பையில் போட்டு எடுத்து வந்து குப்பை தொட்டியில் போட்டுவிட்டு சென்றது தெரியவந்தது. உரிய நேரத்தில் நகை பையை கண்டெடுத்து கொடுத்த வங்கி காவலாளி கோதண்டத்தை போலீசார் வெகுவாக பாராட்டினார்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading