வறுமையை ஒழிக்க காங்கிரஸ் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை-அமித் ஷா தாக்கு

நாட்டில் வறுமை நிலையை ஒழிக்க காங்கிரஸ் கட்சி முந்தைய ஆட்சிக் காலத்தில் போதிய நடவடிக்கையை எடுக்கவில்லை என்று பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான அமித் ஷா அமித்…

நாட்டில் வறுமை நிலையை ஒழிக்க காங்கிரஸ் கட்சி முந்தைய ஆட்சிக் காலத்தில் போதிய நடவடிக்கையை எடுக்கவில்லை என்று பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான அமித் ஷா அமித் ஷா குற்றம்சாட்டினார்.

டெல்லி விஞ்ஞான் பவனில் 100ஆவது சர்வதேச கூட்டுறவுகள் தின விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று அமைச்சர் அமித் ஷா கூறியதாவது:

கம்யூனிசம் மற்றும் முதலாளித்துவம் ஆகிய இரண்டு வளர்ச்சி மாடல்களை இந்த உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால், கூட்டுறவு மாடல் இந்தியாவுக்கு ஏற்றதாகி இருக்கிறது. கூட்டறவுத் துறை, நாடு தன்னிறைவு பெறுவதை உறுதி செய்வதுடன், 70 கோடி ஏழை மக்களின் பொருளாதார வளமைக்கும் உதவியாக இருக்கிறது. இந்தக் கூட்டறவு மாடல் என்பது நடுவில் பயணிப்பது போன்றதாகும்.

ஏற்கனவே உள்ள பொருளாதார மாடல்கள் வளர்ச்சியில் நிலையற்றத்தன்மையை ஏற்படுத்தியிருக்கிறது. அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு கூட்டுறவு மாடலை பிரபலப்படுத்த வேண்டும்.

உலகில் உள்ள ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 12 சதவீதம் பேர் 30 லட்சத்துக்கும் அதிகமான கூட்டுறவு சங்கங்களுடன் இணைந்திருக்கின்றனர்.

இந்த 30 லட்சம் கூட்டுறவு சங்கங்களில் 8.5 லட்சம் சங்கங்கள் இந்தியாவில் உள்ளன. சுமார் 13 கோடி பேர் இவற்றுடன் நேரடியாக இணைந்துள்ளனர். இந்தியாவில் உள்ள 91 சதவீத கிராமங்கள் கூட்டுறவு சங்கங்களைக் கொண்டுள்ளன.

கடந்த 70 ஆண்டுகளில் வளர்ச்சி என்பதை கனவாகக் கூட மக்களால் காண முடியவில்லை.
முந்தைய ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி ஏழ்மையை ஒழிக்க போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாததுதான் அதற்குக் காரணம்.

மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தாமல், அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் சுகாதாரம் குறித்தும் குறித்து கவலைப்படாமல் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் அவர்களை இணைக்க முடியாது. ஆனால், 2014ம் ஆண்டு பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, ஏழை மக்கள் நல்லவித மாற்றங்களை சந்தித்தனர். இன்றையச் சூழலில் அவர்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைத்துள்ளது. வீடு, உணவு, மின்சாரம் என அனைத்து அடிப்படை வசதிகளும் இந்த மக்களுக்கு கிடைத்துள்ளது.

தேசிய கூட்டுறவு பல்கலைக்கழகத்தை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் நன்கு பயற்சி பெற்ற திறமையானவர்களை கூட்டுறவுத் துறையில் பணியமர்த்த முடியும் என்றார் அமித் ஷா.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.