சூடான் உள்நாட்டு போரில் இதுவரை 413 பேர் கொல்லப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் நாட்டில் அதிகாரங்களை யார் கையில் வைத்திருப்பது என்ற நோக்கில் ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகளுக்கு இடையே காணப்பட்ட மோதல் போக்கு தற்போது பெரும் பிரச்னையாக வெடித்துள்ளது. இதனால் ராணுவம், துணை ராணுவத்தினர் ஆங்காங்கே குழுக்கள் குழுக்களாக சண்டையிட்டு வருகின்றனர்.
இதுவரை சூடான் ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே ஏற்பட்ட மோதலில் அப்பாவி பொதுமக்கள் உட்பட இதுவரை 413 பேர் கொல்லப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், 3 ஆயிரத்து 551 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், உள்நாட்டு போரில் குழந்தைகளும் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : DRS-ஐயே மிஞ்சிய ‘தல’-ன் திறமை ! தோனியின் கணிப்பு தவறுமா என ரசிகர்கள் பாராட்டு
மேலும், பள்ளிகள் மற்றும் பராமரிப்பு மையங்களில் குழந்தைகள் தஞ்சமடைந்துள்ளதாகவும், சுகாதார வசதிகள் இன்றி மக்கள் தவித்து வருவதாகவும் உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.








