29.5 C
Chennai
April 27, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள் விளையாட்டு

DRS-ஐயே மிஞ்சிய ‘தல’-ன் திறமை ! தோனியின் கணிப்பு தவறுமா என ரசிகர்கள் பாராட்டு

நேற்று நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் DRS முறையை துல்லியமாக கணித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் திறமையை கண்டு கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

பொதுவாகவே கிரிக்கெட் போட்டியின் போது மைதான நடுவர்கள் சரியான தீர்ப்பை பெரும்பாலும் வழங்கினாலும், சில நேரங்களில் அவுட் கொடுப்பதில் சர்ச்சை ஏற்படுவது வழக்கம் . அதிலும் வெற்றியை நோக்கி ஒரு அணி உத்வேகமாக விளையாடிக் கொண்டிருக்கும் போது நடுவரின் இத்தகைய தவறான முடிவால் அந்த அணியின் வெற்றி கேள்விக்குறியாகி விடுவதும் பல சமயங்களில் நாம் பார்த்திருக்கிறோம் .

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனாலேயே நடுவர் தீர்பை எதிர்த்து அப்பீல் செய்யும் DRS (Decision Review System) முறை கொண்டுவரப்பட்டது . இதில் நடுவர் தீர்ப்பில் சந்தேகம் இருந்தால் அதை எதித்து பேட்ஸ்மேன் அல்லது பீல்டிங் அணி கேப்டன் ரிவியூ கேட்கலாம். அதேபோல் பந்து வீச்சு அணி ரிவியூ ஆப்ஷன் கேட்கும்போது, பந்து வீச்சாளரும், விக்கெட் கீப்பரும்தான் முக்கிய பங்கு வகிப்பார்கள். ஏனெனில் இவர்களுக்குத்தான் பந்து லைனில் பிட்ச் ஆனதா, இல்லையா ? பந்து பேட்டில் பட்டதா, இல்லையா ? பந்து ஸ்டம்பை தாக்குமா, அல்லது ஸ்டம்பிற்கு மேல் செல்லுமா? போன்ற பல விஷ்யங்களை இவர்களால் தான் சரியாக கணிக்க முடியும்.

அப்படிப்பட்ட DRS முறையை பயன்படுத்தும் போது பலமுறை பல கேப்டன்கள், பௌலர்கள், பேட்ஸ்மேன்கள், விக்கெட் கீப்பர்கள் தவறாக கணித்து ரிவியூ வாய்ப்பை இழந்திருந்தாலும், ஒருவர் மட்டும் இதுவரை இந்த DRS விஷயத்தில் சறுக்கியதே கிடையாது. அவர்தான்
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான ‘தல’ தோனி. இவர் DRS ரிவியூ ஆப்ஷனை கேட்க சொன்னால், கட்டாயம் அது அவுட்டாகத்தான் இருக்கும். அந்த அளவுக்கு துல்லியமாக கணித்துதான் அவர் ரிவியூவிற்கே செல்வார். இதனாலேயே அவரது ரசிகர்கள் DRS முறையை Dhoni Review System என்று வேறு விதமாக அழைத்து மகிழ்வார்கள். அந்த வகையில் நேற்று நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போதும் DRS முறையை துல்லியமாக கணித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் திறமையை கண்டு கிரிக்கெட் ரசிகர்கள் தற்போது பாராட்டி வருகின்றனர்.

குறிப்பாக, நேற்று நடைபெற்ற ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் 18வது ஓவரின் போது துஷார் டேஷ்பாண்டே வீசிய பந்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பேட்ஸ்மேன் டேவிட் வைஸ் தவறான கோட்டில் விளையாடியதால் அவரது தொடையில் பட்டது. இதனை LBW என கோரி துஷார் மற்றும் தோனி நடுவரிடம் அவுட் கேட்ட போது பந்து ஸ்டம்புக்கு மேலே சென்றிருக்கும் என்று நினைத்த நடுவர் நிதின் மேனன், அதை நாட் அவுட் என கூறிவிட்டார். உடனே தோனி DRS-க்கு சைகை செய்ய, மூன்றாவது நடுவரிடம் ரிவியூவிற்கு சென்றது. இருப்பினும், ரீப்ளேயில் பந்து லெக்-ஸ்டம்பின் மேற்பகுதியில் மோதும் படி காட்டியதால், ஆன்-பீல்ட் அம்பயர் தனது முடிவை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து அவரும் அவுட் கொடுக்க, தோனியின் DRS திறமையை கண்டு ஸ்டேடியமே கை தட்டியது.  அதே நேரத்தில் KKR கேப்டனான நிதிஷ் ராணா, ரீப்ளேயில் தோனி சொன்னது சரியானதை கண்டு திகைத்துப்போய், முடிவை மாற்றியமைத்ததை பாராட்டி தலையசைத்து சைகை செய்தார். தற்போது இந்த வீடியோ பல ரசிகர்களால் பகிரப்பட்டு வருவதோடு, இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading