40 தென்னை மரங்களுக்கு ஆசிட் ஊற்றிய மர்ம நபர்கள்!

பல்லடம் அருகே புதுப்பாளையம் கிராமத்தில் 40 தென்னை மரங்களுக்கு ஆசிட் ஊற்றிய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே புதுப்பாளையம் ஊராட்சியில் வசித்து வருபவர் ஜெகநாதன் என்பவரது…

பல்லடம் அருகே புதுப்பாளையம் கிராமத்தில் 40 தென்னை மரங்களுக்கு ஆசிட் ஊற்றிய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே புதுப்பாளையம் ஊராட்சியில் வசித்து வருபவர் ஜெகநாதன் என்பவரது மகன் கவின்குமார். இவர் தனக்கு சொந்தமான நான்கு ஏக்கர் நிலத்தில் சுமார் 300 தென்னங்கன்றுகள் நட்டு வளர்த்து வருகிறார். கவின் என்பவருக்கும், அவரது பக்கத்து தோட்டக்காரர் சுப்பிரமணியன் என்பவருக்கும் ஏற்கனவே நிலத்தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. குமார் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலையில் கவின்குமார் தனது தோட்டத்திற்கு சென்று பார்த்த போது 40 தென்னங்கன்றுகளில் குருத்தில் ஆசிட் மற்றும் களைக்கொல்லி மருந்தை கலந்து மர்ம நபர்கள் ஊற்றியுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். 40 தென்னங்கன்றுகள் முழுவதுமாக கருகி காய்ந்துள்ளதால் தென்னங்கன்றுகள் மீது ஆசிட் ஊற்றியவர்களை மீது நடவடிக்கை கோரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.