ஹரியானாவில் 4 தீவிரவாதிகள் கைது

ஹரியானாவில் காலிஸ்தான் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ஹரியான மாநிலம் கர்னாலில் சந்தேகத்தின் பேரில் 4 பேரை கைது செய்துள்ளோம்.…

ஹரியானாவில் காலிஸ்தான் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ஹரியான மாநிலம் கர்னாலில் சந்தேகத்தின் பேரில் 4 பேரை கைது செய்துள்ளோம். அவர்கள் குர்பிரீத், அமந்தீப், பர்மிந்தர் மற்றும் பூபிந்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் இவர்கள் 3 பேர் பஞ்சாப் மாநிலத்தை சேர்தவர்கள் எனவும் தெரிவித்தார்.

மேலும் அவர்களிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கி மற்றும் 31 தோட்டாக்கள், 3 ஐஇடிகள், 6 மொபைல் போன்கள் மற்றும் ரூ. 1.3 லட்சம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், குற்றச்சாட்டப்பட்டுள்ள குர்பிரீத் பெரோஸ்பூர் மாவட்டத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த காலிஸ்தானி தீவிரவாதி ஹர்ஜிந்தர் சிங் ரிண்டாவால் என்பவரிடம் இருந்து டிரோன் மூலம் ஆயுதங்கள் மற்றும் போதை பொருட்கள் பெறப்பட்டுள்ளதாகவும், நாந்தெட் பகுதியில் வெடிகுண்டுகளை வீசியதிலும் தொடர்புடையது முதற்கட்ட விசாரணையில் தெரிவந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், கைது செய்யப்பட்ட நால்வரைத் தவிர, பாகிஸ்தானைச் சேர்ந்த பாபர் கல்சா இன்டர்நேஷனல் (பிகேஐ) பயங்கரவாதி, ஹர்விந்தர் சிங் ரிண்டா மற்றும் படாலாவைச் சேர்ந்த ராஜ்வீர் சிங் ஆகியோர் மீதும் எப்ஐஆரில் போடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.