முக்கியச் செய்திகள் உலகம் தமிழகம்

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த ராஜபக்சே

இலங்கை மக்களுக்கு உதவுவதற்கு முன்வந்ததற்காக கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்சே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலுக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கையில் அன்னிய செலவாணி கையிருப்பு குறைவு, கொரோனா பரவல்  போன்ற காரணங்களால் கடும் பொருளாதார நெருங்கடி ஏற்பட்டது. இதனால் மக்கள் அத்தியாவசிய பொருட்கள், உணவு, மருந்து பொருட்கள், பெட்ரோல், டீசல் போன்ற பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. இதனால் மக்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியின.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் இலங்கை மக்களின் துயரை துடைக்க தமிழ்நாடு அரசு அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைப்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு சட்டப்பேரவையில் தனி தீர்மானம் இயற்றியது. இதற்கு இலங்கையின் கௌரவ பிரதமரான மகிந்த ராஜபக்சே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

அவர் தனது கடிதத்தில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாங்கள் கொண்டு வந்த தனித் தீர்மானத்தின்படி இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி சூழ்நிலையில் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ள மக்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து உணவு, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என்று தாங்கள் அறிவித்துள்ளது தங்களின் நல்லெண்ணத்தை காட்டுகின்றது.

இங்கு நிலவும் பொருளாதார நெருக்கடியை அண்டை நாட்டின் பிரச்சினையாக பார்க்காது மனிதாபிமான அடிப்படையில் பார்க்கும் தங்களுக்கும், மாநில அரசிற்கும் இலங்கை மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“சபாநாயகர் பதவிக்கு கௌரவம் சேர்த்தவர் பி.ஹெச் பாண்டியன்” – முதல்வர் பழனிசாமி

Jeba Arul Robinson

மதுரை: மேலாளர் பதவிக்கு விண்ணபிக்க நாளை கடைசி நாள்!

G SaravanaKumar

2021 ஏப்ரல் வரை பொறியியல் கல்லூரிகளில், ஆன்லைன் வாயிலாக மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும் – அண்ணா பல்கலை.

Nandhakumar