காதல் விவகாரத்தில் வாலிபரை ஓட ஓட விரட்டி வெட்டிய 4 பேர் கைது

சென்னை தாம்பரம் அடுத்த கிஷ்ணா நகர் பகுதியில் காதல் விவகாரத்தில் கோகுல் என்ற வாலிபரை ஓட ஓட வெட்டிய  மனைவியின் நண்பர்கள் உட்பட 4 பேர் கைது. சென்னை தாம்பரம் அடுத்த கிஷ்ணா நகர்…

சென்னை தாம்பரம் அடுத்த கிஷ்ணா நகர் பகுதியில் காதல் விவகாரத்தில்
கோகுல் என்ற வாலிபரை ஓட ஓட வெட்டிய  மனைவியின் நண்பர்கள் உட்பட
4 பேர் கைது.

சென்னை தாம்பரம் அடுத்த கிஷ்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் கோகுல் (27). இவரது மனைவி யாஸ்மின் (24).இவர்கள் கடந்த 2019ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இருவரும் ஒன்றாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு சிலர் கோகுலை வீட்டின் வெளியே அழைத்து சரமாறி வெட்டியுள்ளனர். இதில் இரண்டு கைகள், தலை, கால், முழங்கை என பல்வேறு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை தாம்பரம் போலீசார் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் மேல் சிகிச்சைகாக  சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.இது குறித்து மனைவி யாஸ்மின் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் தாம்பரம் காவல் ஆய்வாளர் சார்லஸ் தலைமையில் காவல் துறையினர் சம்பவத்தில் ஈடுபட்ட விஜயகுமார்,அருள்ராஜ், ஜெய்கிருஷ்ணன், பார்திபன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது யாஸ்மின் மேற்கு தாம்பரம் மாந்தோப்பு பகுதியில் உள்ள பள்ளியில் படிக்கும் போது விஜயகுமார் உடன் காதல் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்ததாகவும், இவர்களது காதல் குறித்து யாஸ்மினின் வீட்டிற்கு தெரிய வந்ததால் யாஸ்மினை வேறு ஒரு நபருடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். அவர்களுக்கு இரண்டு குழந்தையும் பிறந்துள்ளது.

இரண்டு வருடங்கள் இருவரும் வாழ்ந்து வந்துள்ளனர் ஆனாலும் யாஸ்மினுக்கு விஜயகுமாருடன்தொடர்பு இருந்துள்ளது. அந்த தகவல் அவரது கணவருக்கு தெரிய வந்த நிலையில் யாஸ்மின் வீட்டை விட்டு வெளியே வந்து விஜயகுமாருடன் வாழ்ந்து வந்துள்ளார். பின்னர் விஜய்குமார் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்ற நிலையில் அதே பள்ளியில் படித்த கோகுல் உடன் யாஸ்மினுக்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்துள்ளார். இதனால் கோகுல் மற்றும் விஜயகுமார் இடையே
விரோதம் ஏற்பட்டு அடிக்கடி இருவருக்கும் தகராறில் ஈடுப்பட்டுவந்துள்ளனர்.இந்நிலையில் சமீபத்தில் விஜயகுமாரின் நண்பர் அருள்ராஜ், கோகுலை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.அப்போது கோகுல்,அருள்ராஜை தாக்கியுள்ளார். இது விஜயகுமாருக்கு தெரிய வர கோகுலை தீர்த்துகட்டும் நோக்கத்தில் நேற்று இரவு விஜயகுமார் தனது நண்பர்களான அருள்ராஜ், ஜெய்கிருஷ்ணன், பார்திபன், சரவணன்
ஆகியவர்களுடன் கோகுல் வீட்டிற்கு சென்று அவரை வெளியே அழைத்து தெருவில் ஓட ஓட விரட்டி கொலை வெறி தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். இதனை அடுத்து அவர்கள் நான்கு பேரையும் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் எடுத்த போலீசார் தலைமறைவாக உள்ள சரவணன் என்பவரை  தேடி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.