“10 இல் 7 இந்தியர்கள் பின்னிருக்கையில் அமரும்போது சீட் பெல்ட் அணிவதில்லை”

10 இல் 7 இந்தியர்கள் காரில் பன்னிருக்கையில் அமர்ந்து பயணிக்கும்போது சீட் பெல்ட் அணிவதில்லை என்று கருத்துக் கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் இந்தத் தகவல்…

10 இல் 7 இந்தியர்கள் காரில் பன்னிருக்கையில் அமர்ந்து பயணிக்கும்போது சீட் பெல்ட் அணிவதில்லை என்று கருத்துக் கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.

நாடு முழுவதும் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.

10,000 பேரில் 70 சதவீதம் பேர் பின்னிருக்கையில் அமரும்போது சீட் பெல்ட் அணிவதில்லை. சமீபத்தில் கார் விபத்தில் பிரபல தொழில் அதிபர் சைரஸ் மிஸ்ட்ரி உயிரிழந்தார்.

கடந்த 2014 இல் பாஜக மூத்த தலைவர் கோபிநாத் முண்டேவும் சாலை விபத்தில் உயிரிழந்தார்.  இவர்கள் இருவருமே பின்னிருக்கையில் அமர்ந்திருந்தபோது சீட் பெல்ட் அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சைரஸ் மிஸ்ட்ரி பயணித்த காரில் முன்னிருக்கையில் சீட் பெல்ட் அணிந்து பயணித்தவர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

முன்னிருக்கையில் அமர்பவர்களுடன் பின்னிருக்கையில் அமர்பவர்களும் சீட் பெல்ட் அணிந்தால் பெரிய விபத்துகள் நேரிடும்போது குறைவான காயங்களும் உயிர் தப்பிக்க வாய்ப்புகள் அதிகம்.

முன்னதாக, மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம், பின்னிருக்கையில் அமர்பவர்களுக்காகவும் ஏர் பேக் பொருத்த கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட யோசனையில் ஈடுபட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.