அமெரிக்க விமானத்தில் பயணி மீது சிறுநீர் கழித்த இந்திய மாணவர்

அமெரிக்க விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்த இந்திய மாணவர் விமானத்தில் பறக்க தடை விதிக்கப்படும் என அமெரிக்க நிறுவனம் கூறியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஜான் கென்னடி சர்வதேச விமான…

அமெரிக்க விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்த இந்திய மாணவர் விமானத்தில் பறக்க தடை விதிக்கப்படும் என அமெரிக்க நிறுவனம் கூறியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஜான் கென்னடி சர்வதேச விமான நிலையத்திலிருந்து டெல்லி விமான நிலையத்துக்கு அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானம் நேற்று புறப்பட்டது. அந்த விமானத்தில் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஆரியா என்ற இந்திய மாணவர் பயணித்து உள்ளார். குடிபோதையில் அந்த மாணவர் விமானத்தில் வந்த சக பயணி மீது சிறுநீர் கழித்து உள்ளார். தொடர்ந்து விமானம் நேற்று இரவு 10 மணிக்கு டெல்லி விமான நிலையத்துக்கு வந்தடைந்தது.

அண்மைச் செய்தி : வடமாநில தொழிலாளர்கள் குறித்து அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் முத்துச்சாமி

இந்த விவகாரம் குறித்து ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவிக்கையில், பயணி மீது சிறுநீர் கழித்த இந்திய மாணவர் குடிபோதையில் இருக்கையில் அமராமல் தொடர்ந்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வந்தார். அவரை விமானத்தில் பறக்க தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என நிறுவனம் கூறியுள்ளது. சமீபத்தில் ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சங்கர் மிஸ்ரா என்பவர் குடிபோதையில் சிறுநீர் கழித்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.