தமிழ்நாட்டிலுள்ள கூட்டுறவு வங்கிகளில் இதுவரை 97% நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகைகள் அடமானம் வைத்து கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு, மாநிலம் முழுவதும் நகைக் கடன் தள்ளுபடியில் தகுதி வாய்ந்த பயனாளிகளின் பட்டியலைத் தயார் செய்தது.
அண்மைச் செய்தி: ‘தமிழ்நாடு ஆளுநர் தொடர்பாக விவாதிக்க மறுப்பு; திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு’
தொடர்ந்து தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு நகைகளை திரும்ப ஒப்படைக்கும் பணி, மார்ச் மாத இறுதியில் தொடங்கியது. இதுகுறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாநிலம் முழுவதும் இதுவரை 97.05% நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 4,805 கோடி ரூபாய் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதன்மூலம் 12,19,106 பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








