முக்கியச் செய்திகள் விளையாட்டு

3வது 20 ஓவர் கிரிக்கெட்- இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 3வது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது.

3 ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டங்கள் கொண்ட தொடரை முழுமையாக கைப்பற்றிய இந்தியா, 5 டி20 கிரிக்கெட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. முதல் டி20 ஆட்டத்தில் இந்தியாவும், 2வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸும் வெற்றி பெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், 3வது ஆட்டம் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார் கேப்டன் ரோஹித் சர்மா.

இதையடுத்து முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்கம் முதலே அதிரடி காண்பித்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிராண்டன் கிங் 20 ரன்களில் ஆட்டமிழந்துவிட்டபோதிலும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான மேயர்ஸ் அரை சதம் பதிவு செய்து அசத்தினார்.

கேப்டன் பூரன் 22 ரன்களும், போவெல் 23 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஹெட்மயர் 20 ரன்களில் ரன்-அவுட் ஆனார். இவ்வாறாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு வெஸ்ட் இண்டீஸ் அணி 164 ரன்களை எடுத்தது.

165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா விளையாடியது. சென்ற ஆட்டம் போன்ற ரோஹித் சர்மா இந்த ஆட்டத்திலும் சோபிக்கவில்லை. அதேநேரம், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சூர்யகுமார் யாதவ் அதிரடி காண்பித்தார். 44 பந்துகளில் 3 சிக்ஸர், 8 பவுண்டரிகள் என 76 ரன்கள் எடுத்து சேஸிங்கிற்கு உதவினார்.

டொமினிக் டிராக்ஸ் வீசிய பந்தில் அவர் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். ஸ்ரேயஸ் ஐயர் 24 ரன்களிலும், ஹார்திக் பாண்டியா 4 ரன்களிலும் நடையைக் கட்ட, விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 33 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் வெற்றி இலக்கை அடைந்தார்.

இவ்வாறாக 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்து இந்தியா வெற்றி அடைந்தது. இந்த ஆட்டத்தில் அதிகபட்சமாக இந்தியா சார்பில் புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகளையும் வெஸ்ட் இண்டீஸ் சார்பில் டொமினிக் டிரேக்ஸ், ஜேசன் ஹோல்டர், அகீல் ஹுசைன் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

அரை சதம் விளாசிய சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.
5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. நான்காவது டி20 ஆட்டம் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கூட்டணி தர்மமே இல்லாமல் பாமகவை வீழ்த்தினார்கள்: ராமதாஸ் பேச்சு

EZHILARASAN D

கேரளாவில் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி

Web Editor

தபால் வாக்குகளில் திமுக முன்னிலை

Halley Karthik