ஒகேனக்கலுக்கு நீர்வரத்து ஒரு லட்சத்து 45 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு இரண்டாவது நாளாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை நிலவரப்படி ஒரு லட்சத்து 25 ஆயிரம் நாடியாக இருந்த நீர்வரத்து இருந்தது. இன்று காலை 6.30 மணி நிலவரப்படி ஒரு லட்சத்து 45 ஆயிரம் கனியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.
மேலும் ஒகேனக்கலில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பரிசல் இயக்கவும் குளிக்கவும் 26 வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
ஒகேனக்கல் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் ஓர் இடமாகும். இங்கு எந்த நேரத்திலும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்த வண்ணமே காணப்படும். பரிசல் சவாரியும் இங்கு மிகவும் பிரபலம். தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடகத்திலிருந்தும் ஒகேனக்கலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகம்.








