முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

உலகில் மிகவும் மாசடைந்த நாடுகள் பட்டியல்: 8வது இடத்தில் இந்தியா

2022ம் ஆண்டில் உலகிலேயே மிகவும்  மாசடைந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 8வது இடத்தில் உள்ளது.

2022ம் ஆண்டில் சர்வதேச அளவில் காற்றின் தரம் குறித்த ஆய்வறிக்கையை சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஐகியூஆர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 131 நாடுகளில் 30,000 சோதனை கருவிகள் மூலம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த ஆய்வறிக்கையின் படி, உலகிலேயே மாசடைந்த நாடுகள் பட்டியலில் சாத் நாடு முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் ஈராக் உள்ளது. மூன்றாவது இடத்தில் பாகிஸ்தானும் நான்காவது இடத்தில் பஹ்ரைனும் உள்ளது. கடந்த 2021ம் ஆண்டு 5-வது இடத்தில் இருந்த இந்தியா 2022ம் ஆண்டில் எட்டாவது இடத்தில் உள்ளது.

அண்மைச் செய்தி : நியூஸ் 7 தமிழ் ‘நிகரென கொள்’ விழிப்புணர்வு இயக்கம்: டிடிவி தினகரன் தலைமையில் அமமுகவினர் உறுதிமொழி ஏற்பு!

உலக சுகாதார நிறுவனம் அனுமதிக்கப்பட்ட அளவை விட இந்தியாவில் காற்றின் தரம் 10 மடங்கு அதிகமாக உள்ளது. உலகில் மிகவும் மாசடைந்த நகரங்கள் பட்டியலில் பாகிஸ்தானை சேர்ந்த லாகூர் முதலிடத்திலும் சீனாவைச் சேர்ந்த ஹோட்டன் நகரம் இரண்டாவது இடத்திலும் உள்ளது. ராஜஸ்தானி உள்ள பிஹிவாடி மற்றும் டெல்லி  நகரங்கள் மூன்றாவது இடத்திலும் நான்காவது இடத்திலும் உள்ளது. டெல்லியில் உள்ள மாசு அனுமதிக்கப்பட்ட அளவை விட 20 மடங்கு அதிகமாக உள்ளது.

இந்தியாவில் உள்ள மெட்ரோ நகரங்களான கொல்கத்தா 99 வது இடத்திலும் மும்பை 137வது இடத்திலும் ஹைதராபாத் 199வது இடத்திலும் பெங்களூரு 440வது இடத்திலும் சென்னை 682வது இடத்திலும் உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சையத் முஷ்டாக் அலி கோப்பை: ஐதராபாத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது தமிழ்நாடு

Halley Karthik

அக்னிபாத்துக்கு எதிர்ப்பு; தமிழ்நாட்டிலும் போராட்டம்

G SaravanaKumar

எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து சொன்ன திருமாவளவன்..!

Web Editor