“தி எலிஃபண்ட் விஸ்பரர்” ஆவணப் படம் ஆஸ்கர் விருது பெற்றது குறித்து வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நியூஸ் 7 தமிழுக்குப் பேட்டி அளித்துள்ளார்.
ஆவண குறும்படமான “தி எலிஃபண்ட் விஸ்பரர்” ஆஸ்கர் விருது பெற்றது குறித்தும், யானைகளின் அவசியம் குறித்தும் வனத்துறை அமைச்சர் மதிவேந்தனுடன் நியூஸ் 7 தமிழ் சென்னை மண்டல தலைமை செய்தியாளர் தேவா இக்னேசியஸ் சிரில் கலந்துரையாடல் நடத்தினார்.
அப்போது பேசிய அமைச்சர், வனத்துறை சார்ந்த இடத்தில் எடுத்த படம் சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்திருப்பது தமிழ்நாட்டிற்குப் பெருமை. முதுமலை முகாமில் சில ஆண்டுகளாக யானை குட்டிகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. யானை குட்டிகளை அதன் தாயிடம் சேர்ப்பதே வனத்துறையின் முக்கிய பணி என தெரிவித்தார்.
அத்துடன், அடர்த்தியான காட்டில் தாய் யானை எங்கே இருக்கிறது? என்று தெரியாத சூழலில் யானை குட்டிகள் பராமரிக்கப்படுகின்றன. பொம்மன் நன்றாக யானைகளைப் பராமரிக்கும் பாகன். யானை குட்டிகளை வளர்க்கும் போது உணர்வுப்பூர்வமாக ஒரு பிணைப்பு வந்து விடுதாகவும் அவர் கூறினார்.
மேலும், அளிக்கப்பட்ட யானை குட்டிகளைப் பராமரித்த பிறகு மீண்டும் மற்றொரு குட்டியை அளிக்கக்கூடிய ஒரு பணி அவர்களுக்கு வரும். வளர்த்த யானையைப் பிரிவது கடினமான விஷயம். யானைகள் ஊருக்குள் வருவதைத் தவிர்க்க அகழிகள், தேவையான இடத்தில் சோலார் வேலிகள் அமைத்து கண்காணிக்கிறோம் என அவர் தெரிவித்தார்.
அத்துடன், யானைகளுக்கும் வாழ்வதற்கான உரிமை இருக்கிறது என்பதை நாமும் புரிந்து கொள்ள வேண்டும். ஊருக்குள் வரும் விலங்கை வெறுப்புணர்வு இல்லாமல் புரிந்து கொண்டு, வனப்பகுதிக்குள் அனுப்பப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
அந்த கலந்துரையாடலை முழுமையாக பார்க்க….







