முக்கியச் செய்திகள் இந்தியா

36 செயற்கை கோள்களும் சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தம்

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் GSLV M3 ராக்கெட் ஏவப்பட்ட  36 செயற்கை கோள்களும் வெற்றிகரமாக அதன் சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

ஶ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து, சரியாக 12:07 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி-எம் 3 விண்ணில் பாய்ந்தது. GSLV M3 ரக ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டதை அடுத்து 35 வது நிமிடத்தில் 16 வது செயற்கைக்கோளை அதன் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக இஸ்ரோ நிலை நிறுத்தியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மீதமுள்ள செயற்கைக்கோள்கள் அதனதன் சுற்றுவட்ட பாதைகளில் நிலை நிறுத்தும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்றது. அதன்படி ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்ட 1 மணி நேரம் 31 நிமிடங்களில் 36 செயற்கை கோள்களும் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டன.

இதுவே இங்கிலாந்தின் 36 செயற்கை கோள்களை கொண்டு பயணிக்கும் முதல் GSLV ராக்கெட்டாகும். வணிக ரீதியான ராக்கெட் ஏவுதலில் 36 செயற்கைக்கோள்களை கொண்டு இஸ்ரோ பயணிப்பது இதுவே முதல் முறையாக பார்க்கப்படுகிறது. இதுவரை 345 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணில் ஏவியுள்ளது. வணிக ரீதியாக ராக்கெட் ஏவுதலில், சந்தையில் இன்னொரு அடியை எடுத்து வைத்துள்ளது இந்தியா.

இதுவரை இஸ்ரோ செலுத்திய ராக்கெட்டுகளை விட, வணிக ரீதியிலான பயன்பாட்டில் இங்கிலாந்துடன் ஒப்பந்தம் போடபட்டு பயணிக்கும் முதல் அதிக எடை கொண்ட ராக்கெட் என்ற பெருமையை பெற்றுள்ளது GSLV M3. GSLV மார்க் 3 ரக ராக்கெட்டால் 10 டன் எடைவரை சுமந்து செல்ல இயலும். இந்தமுறை இங்கிலாந்தின் ஒன் வெப் நிறுவனத்தில் 36 செயற்கை கோள்களை GSLV M3 எடுத்து செல்கிறது .

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பச்சை நிறமாக மாறிய கன்னியாகுமரி கடல்; அச்சத்தில் மீனவர்கள்

EZHILARASAN D

நடிகர் சூரி உணவகத்தில் வணிகவரித்துறை சோதனை – அமைச்சர் மூர்த்தி விளக்கம்

EZHILARASAN D

கொரோனாவைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை: டி.ஆர்.பாலு

EZHILARASAN D