34 ஆண்டு கால வழக்கு-நவ்ஜோத் சிங் சித்துவுக்கு சிறை

34 ஆண்டு கால வழக்கு ஒன்றில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கு உச்சநீதிமன்றம் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 1988ஆம்…

34 ஆண்டு கால வழக்கு ஒன்றில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கு உச்சநீதிமன்றம் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

1988ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ஆம் தேதி, சாலையில் நடைபெற்ற சிறிய பிரச்னைக்கு குர்ணாம் சிங் என்பரின் தலையில் சித்து தாக்கியதாகவும் அதனால் அவர் உயிரிழந்ததாகவும் பாதிக்கப்பட்டவர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்படி, காவல் துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்தது. இந்த வழக்கை விசாரித்த பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா நீதிமன்றம் கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி சித்துவுக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லை என்று கூறி அவரை விடுவித்தது.

இதையடுத்து, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் 2006ஆம் ஆண்டு பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் மேல்முறையீடு செய்தனர். அதை விசாரித்த நீதிமன்றம் சித்துவை குற்றவாளி என்று அறிவித்து 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் சித்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த உச்சநீதிமன்றம் அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.