தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது மோதிய லாரி: 3 பேர் பலி

ஹரியாணாவில் சாலையில் தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். ஜஜ்ஜார் மாவட்டம், ஆசோடா மோல் பிளாசா அருகே குண்ட்லி-மனேசர்-பல்வால் விரைவுச் சாலையில் நிலக்கரி ஏற்றிச் சென்ற லாரி…

ஹரியாணாவில் சாலையில் தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

ஜஜ்ஜார் மாவட்டம், ஆசோடா மோல் பிளாசா அருகே குண்ட்லி-மனேசர்-பல்வால் விரைவுச் சாலையில் நிலக்கரி ஏற்றிச் சென்ற லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது, சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீது லாரி மோதியதில், சம்பவ இடத்திலேயே மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதில், 11 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் பலரும் ரோடக்கில் உள்ள பிஜிஐஎம்எச் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த விபத்தின்போது 18 தொழிலாளர்கள் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தனர். அவர்களில் 4 பேர் காயமின்றி உயிர்தப்பினர்.

இதுகுறித்து, துணை ஆணையர் சக்தி சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், சாலை சீரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பாதுகாப்பான இடத்துக்குச் செல்லுமாறு போலீஸார் எச்சரித்தனர். அதையும் மீறி ஒப்பந்தத் தொழிலாளர்கள் சாலையோரத்தில் படுத்து உறங்கியுள்ளனர்.

தொழிலாளிகள் தூங்குவதற்கு வசதியாக நெடுஞ்சாலையின் ஒருபுறம் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டிருந்தது. அந்த தடுப்புச் சுவரையும் மீறி லாரி அவர்கள் மீது மோதியுள்ளது என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.