சீனா நாட்டின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்தியா இதுவரை ஆறு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டியில், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவிற்கு தங்கம் பதக்கம் கிடைத்துள்ளது. 1,734 புள்ளிகளுடன் அர்ஜூன் சீமா, சரப்ஜோத் சிங், ஷிவா நர்வா ஆகியோர் அடங்கிய இந்திய அணி, சீனாவை ஒரு புள்ளியில் தோற்கடித்து தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது. துப்பாக்கிச் சுடுதலில் இது 4-வது தங்கம். துப்பாக்கிச் சுடுதலில் மட்டும் இதுவரை 4 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் வென்றுள்ளது இந்தியா.
அதேபோல வுஷு சண்டா போட்டியில் பெண்களுக்கான 50 கிலோ பிரிவில் ரோஷிபினா தேவி இன்று வெள்ளி வென்றார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா இதுவரை 6 தங்கம் உள்ளிட்ட 24 பதக்கங்களைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.







