அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது

அனைத்திந்திய அண்ணா திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில், நடைபெற்று வருகிறது. அனைத்திந்திய அண்ணா திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறும்  என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று…

அனைத்திந்திய அண்ணா திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில், நடைபெற்று வருகிறது.

அனைத்திந்திய அண்ணா திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறும்  என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று மாலை, சென்னை ராயப் பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங் கியது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், உள்ளாட்சித் தேர்தல், சசிகலா ஆடியோ விவகாரம், முன்னாள் அமைச்சர் சி.வி .சண்முகத்தின் கருத்து உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.

சட்டமன்றத் தேர்தலில் அடைந்த தோல்விக்கு பின்னர் ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் நடைபெற்று வரும் முக்கிய ஆலோசனைக் கூட்டம் என்பதால், அதிமுகவின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள், வியூகங்கள் குறித்து மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.