முக்கியச் செய்திகள்

மீனவர் வலையில் சிக்கிய 30 கிலோ கஞ்சா: ஒருவர் கைது

ராமேஸ்வரத்தில் மீனவர் வலையில் சிக்கிய 7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புடைய 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, போலீஸார் ஒருவரை கைது செய்தனர்.

ராமேஸ்வரம் பெரிய பள்ளிவாசல் தெரு பகுதியைச் சேர்ந்த ஜனதன் என்பவர் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளார். இந்நிலையில், கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அவரது வலையில் 30 கிலோ எடை கொண்ட கஞ்சா சிக்கியுள்ளது. இதையடுத்து, மீனவர் ஜனதன் அவரது வலையில் சிக்கிய கஞ்சாவை வீட்டிற்கு கொண்டு வந்து ஈரம் இல்லாமல் வெயிலில் உலர வைத்து விற்பனையில் ஈடுபட முயன்றதாகக் கூறப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையடுத்து, ஐஜி ஸ்பெஷல் குற்றத் தடுப்பு போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவல்களை அடுத்து ராமேஸ்வரம் துறைமுக போலீஸாரின் உதவியுடன் விரைந்து சென்று விற்பனைக்காக உலர்த்தி வைக்கப்பட்டிருந்த 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, ஜனதனை கைது செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்

மேலும், இந்த கஞ்சா கடலில் இருந்து கொண்டு வந்த விவகாரத்தில் தொடர்புடைய மற்ற நபர்களையும் போலீஸார் தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் சர்வதேச மதிப்பு 7 லட்சத்து 50 ஆயிரம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram