ஆந்திர பிரதேச விசாகப்பட்டினத்தில் மிதக்கும் சூரிய மின்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேசம் மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள மேகாத்ரி கெடா நீர்த்தேக்கத்தில் (22.07) கிரேட்டர் விசாகப்பட்டினம் முனிசிபல் கார்ப்பரேஷன் (ஜி.வி.எம்.சி) மூலம் மிதக்கும் சூரிய மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் நிலக்கரி மின் உற்பத்திக்கு மாற்றாக இந்த மிதக்கும் சூரிய மின்நிலையைம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மின்உற்பத்திக்கு செலவாகும் நிலக்கரி சேமிக்கப்படுகிறது. இது புதிய முயற்சியாக ஆந்திரா மாநிலம் முன்னெடுத்து தற்போது மின்உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.
இந்த மின்உற்பத்தி நிலையத்தின் கமிஷனர் லட்சுமிஷா கூறுகையில், ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் உள்ள மேகாத்ரி கெடா நீர்த்தேக்கத்தில் 12 ஏக்கர் பரப்பளவில் இந்த மின் உற்பத்தி நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மின்உற்பத்தி நிலையம், ஆண்டுக்கு 4.2 மில்லியன் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடியது. அதுமட்டுமின்றி, இதன் மூலம் ஆண்டுக்கு 54,000 டன் நிலக்கரியைச் சேமிக்க முடியும். மேலும் ஆண்டுக்கு 3,022 டன்கள் உமிழ்வைக் குறைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.








