1 வயது குழந்தையை தவறுதலாக துப்பாக்கியால் சுட்ட 3 வயது சிறுவன்: அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்!

அமெரிக்காவில் தனது ஒரு வயது சகோதரியை 3 வயது சகோதரன் துப்பாக்கியால் தவறுதலாக சுட்டதில் அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் தனது ஒரு வயது சகோதரியை…

அமெரிக்காவில் தனது ஒரு வயது சகோதரியை 3 வயது சகோதரன் துப்பாக்கியால் தவறுதலாக சுட்டதில் அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் தனது ஒரு வயது சகோதரியை மூன்று வயது சகோதரன் தவறுதலாக துப்பாக்கியால் சுட்டதில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சான்டியாகோ கவுண்டியில் உள்ள ஃபால்புரூக்கில் நடந்துள்ளது.

சம்பவம் இடத்திற்கு உடனடியாக வந்த போலீசார் 3 வயது குழந்தையின் கையில் பாதுகாப்பற்ற முறையில் இருந்த துப்பாக்கியை கைப்பற்றினர். பின்னர் ஒரு வயது குழந்தை தலையில் துப்பாக்கியால் சுட்ட பலத்த காயத்துடன் இருந்ததையும் கண்டனர்.

துப்பாக்கி குண்டால் பலத்த காயமடைந்த குழந்தையை தீயணைப்புத் துறையினர் மீட்டு பால்மர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அந்த குழந்தை ஏற்கனவே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

அமெரிக்காவில் துப்பாக்கி வைத்துக் கொள்வது சட்டப்படி அனுமதிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அமெரிக்காவில் அதிகரித்து வரும் நிலையில் 1வயது குழந்தையை தனது 3வயது சகோதரன் தவறுதலாக துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.