ஜூலை 28-ல் சம்பவம் இருக்கு… நடிகர் தனுஷின் பிறந்தநாளன்று வெளியாகும் கேப்டன் மில்லர் அப்டேட்!!

ஜூலை 28-ம் தேதி நடிகர் தனுஷின் பிறந்தநாளன்று கேப்டன் மில்லர் படம் தொடர்பான சர்ப்ரைஸ் வெளியாக உள்ளது என படக்குழு தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும்…

ஜூலை 28-ம் தேதி நடிகர் தனுஷின் பிறந்தநாளன்று கேப்டன் மில்லர் படம் தொடர்பான சர்ப்ரைஸ் வெளியாக உள்ளது என படக்குழு தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘கேப்டன் மில்லர்’. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்நிலையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஜூலை 28 சம்பவம் இருக்கு.. கில்லர் கில்லர் என்று பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் இது கேப்டன் மில்லர் படத்தின் அப்டேட்டாக இருக்கலாம் என்று பேசி வருகின்றனர்.

தற்போது சார்பட்டா திரைப்படத்தில் வேம்புலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்திய ஜான் கொக்கன் அவரது ட்விட்டர் பக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படம் குறித்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் நீங்கள் இதுவரை கண்டிராத வகையில் ஒன்று ஜூலை 28 தேதி அமையும் என குறிப்பிட்டுருந்தார்.

ஜூலை 28ம் தேதி நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு கேப்டன் மில்லர் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாக அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.