மாலத்தீவில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 இந்தியர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்த நிலையில், அதில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாலத்தீவில் மாலி நகரத்தில் இஸ்கந்தர் மாகு எனும் பகுதியில் கார் பழுது பார்க்கும் நிறுவனமும், அதற்கு மேல் தளத்தில் புலம் பெயர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த வாரம் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இந்தியாவை சேர்ந்த 8 பேர் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். கட்டடத்தின் தரை தளத்தில் உள்ள வாகனம் பழுதுபார்க்கும் இடத்தில் இருந்து தீ விபத்து ஏற்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனிடையே, தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் இந்தியாவை சேர்ந்தவர்கள் இருப்பதாக இந்திய தூதரகம் தெரிவித்திருந்தது. மேலும் உதவிக்காக தொலைப்பேசி எண்ணையும் இந்திய தூதரகம் வெளியிட்டிருந்தது. இந்நிலையில், மாலத்தீவில் நிகழ்ந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேர் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காரைக்குடியை சேர்ந்த கணேசன் (50), கன்னியாகுமரியை சேர்ந்த ஜெனில் (45), திருவண்ணாமலையை சேர்ந்த தேன்மொழி (45) ஆகியோர் உடல்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மாலத்தீவு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.