சென்னை, அண்ணா சாலையில் இருசக்கர வாகன சாகசங்களில் ஈடுபட்ட சம்பவத்தில் மேலும் மூன்று பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 8-ம் தேதி இரவு அண்ணா சாலையில் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் இருந்து ஜெமினி மேம்பாலம் வரை இளைஞர்கள் சிலர் ஆபத்தான முறையில் இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகின.
இந்த இருசக்கர வாகன வீலிங் தொடர்பாக திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரைச் சேர்ந்த முகமது ஹாரிஸ் (19), முகமது சைபான் (19) ஆகியோரை பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில் ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பைரோஸ் மாலிக் (19), பெரம்பூரைச் சேர்ந்த இம்ரான் அலிகான் (20), பெரம்பூரைச் சேர்ந்த முகேஷ் (20) ஆகிய மூன்று நபர்களை பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஹைதராபாத்தைச் சேர்ந்த பினோஜ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
-ம.பவித்ரா








