மின்வாரிய ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு

மின்வாரிய ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் அகவிலைப்படி உயர்வு அளித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.  மின்வாரிய ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும்…

மின்வாரிய ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் அகவிலைப்படி உயர்வு அளித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

மின்வாரிய ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் வெளியிட்டுள்ளது. அந்த உத்தரவில், கடந்த ஜனவரி 1 முதல் ஜூலை 30 வரையில் 31 சதவிகித அளவுக்கு அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்தது.

இந்த அகவிலைப்படி ஜூலை 1 முதல் 34 சதவிகிதமாக உயர்த்தப்படுகிறது. ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகை உடனடியாக வழங்கப்படும். மேலும், செப்டம்பர் மாதத்திற்கான நிலுவைத் தொகை ஊதியத்துடன் இணைத்து வழங்கப்படும்.

உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை கணக்கிட அடிப்படை ஊதியத்துடன் தனிப்பட்ட ஊதியத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த அகவிலைப்படி உயர்வானது பணியாற்றக்கூடிய முழுநேரப் ஊழியர்கள், அலுவலர்கள் ஆகியோருக்கு பொருந்தும் என்று மின்சார வாரியத்தின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.