வேளாண் சட்டங்களை ரத்து செய்தற்காக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றமைக்கும், குறைந்தப்பட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய குழு அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கும் பிரதமர் மோடிக்கு தமது நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக பதிவிட்டுள்ளார்.
https://twitter.com/EPSTamilNadu/status/1461617432624189443
அதேபோல, ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேளாண் சட்டங்களை ரத்து செய்துள்ள பிரதமரின் மோடியின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது என தெரிவித்துள்ளார். இதன் மூலம் பிரதமருக்கு உள்ள பெருந்தன்மையும், விவசாயிகள் பால் அவருக்குள்ள அக்கறையும் வெளிப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும், பிரதமர் மோடி விவசாயிகளின் நண்பன் என்பது வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.








