பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி : இலங்கை அணிகள் திணறல்!

பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 17.1 ஓவரில் 36 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.

பாகிஸ்தான் இலங்கை அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ராவல்பிண்டியில் தொடங்குகிறது. இந்தப் போட்டி முன்னதாக லாகூரில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அங்கு நிலவும் கடுமையான புகைமூட்டம் மற்றும் காற்று மாசு காரணமாக போட்டி ராவல்பிண்டிக்கு மாற்றப்பட்டது. இந்தப் போட்டி இன்று காலை தொடங்கியது.

இந்தப் போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, இலங்கை அணி முதலில் களமிறங்கியது. தொடக்கம் முதலே இலங்கை வீரர்கள் ரன் சேர்க்கத் திணறினர். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.
இலங்கை அணி 17.1 ஓவரில் 36 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.
பாகிஸ்தான் சார்பில் மொகமது அப்பாஸ், ரசாவுல்லா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.