தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகின்றன. சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலரின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தினசரி விலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனிடையே நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.75-ம், சவரனுக்கு ரூ.600-ம் குறைந்தது. அதன்படி தங்கம் ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 540-க்கும், சவரனுக்கு ரூ.1 லட்சத்து 320-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ.12,470-க்கும், சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.99,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை இன்று மாற்றமில்லாமல் ஒரு கிராம் ரூ.190-க்கும், கிலோ ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.




