2-வது டி20: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்!

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது டி20 இன்று நடைபெற உள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 2-1 என கைப்பற்றியது.

இதனை தொடர்ந்து அக்.7-ஆம் தேதி, இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி உத்தர பிரதேசத்தின் லக்னோவில் நடைபெற்றது. .இந்தப் போட்டியில் ஷ்ரேயஸ் அய்யர் தலைமையிலான இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் 43 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.

இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டி.20 போட்டி இன்று மாலை 7 மணிக்கு ஜார் கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெறுகிறது. ஒருநாள் தொடரை இழந்ததால் டி20 தொடரை கைப்பற்றும் முனைப்பில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், டி20 தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணியும் களமிறங்க உள்ளதால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பங்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தேச பட்டியல் :

இந்தியா : சஞ்சு சாம்சன் (wk), அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர் (c), திலக் வர்மா, ஷிவம் துபே, நமன் திர், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், மயங்க் யாதவ்/பிரின்ஸ் யாதவ்

வெஸ்ட் இண்டீஸ் : ஷாய் ஹோப் (c&wk), கமில் பூரன், ஷிம்ரோன் ஹெட்மியர், ரோவ்மேன் பவல், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், ரோஸ்டன் சேஸ், ரொமாரியோ ஷெப்பர்ட், மேத்யூ ஃபோர்டே, ஷமர் ஸ்பிரிங்கர்/குடகேஷ் மோட்டி, அகேல் ஹோசைன், ஷமர் ஜோசப்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.