32.5 C
Chennai
April 25, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா விளையாட்டு

நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி – இந்தியாவுக்கு 109 ரன்கள் இலக்கு

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு 109 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. அதன்படி முதலாவது ஒருநாள் போட்டி கடந்த 18ம் தேதி ஐதராபாத்தில் நடைபெற்றது. அந்த போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் இந்திய அணி ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் 2வது ஒருநாள் போட்டி ராய்பூர் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி தொடக்கம் முதலே ரன்களை குவிக்க முடியாமல் தடுமாறியது.

இறுதியில் 34.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்டியா மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர். இதையடுத்து 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கி விளையாடி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading