முதல்படம் வெளியாகும் முன்பே 2-ஆம் திரைப்படத்தை தொடங்கிய ராட்சசன் பட உதவி இயக்குநர்!

கதை மீது நம்பிக்கை வைத்து , தனது முதல்படம் வெளியாவதற்கு முன்பே லாந்தர் படத்தின் படப்பிடிப்பை தொடங்க தயாரிப்பாளர் பத்ரி உத்வேகம் அளித்ததாக இயக்குனர் சஜிசலீம் தெரிவித்துள்ளார். இயக்குனர் ராம்குமாரின் இயக்கத்தில் தமிழில் உருவான…

கதை மீது நம்பிக்கை வைத்து , தனது முதல்படம் வெளியாவதற்கு முன்பே லாந்தர் படத்தின் படப்பிடிப்பை தொடங்க தயாரிப்பாளர் பத்ரி உத்வேகம் அளித்ததாக இயக்குனர் சஜிசலீம் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் ராம்குமாரின் இயக்கத்தில் தமிழில் உருவான ராட்சசன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ராம்குமாரின் உதவி இயக்குநராக இருந்த சாஜிசலீம் தற்போது நடிகர் விதார்த்துடன் இணைந்துள்ளார். சாஜிசலீம் இதற்குமுன் ‘விடியும் வரை காத்திரு’ படத்தினை இயக்கியுள்ளார். இந்தப்படம் வெளியாகும் முன்பே தற்போது லாந்தர் என்ற படத்தினை இயக்க ஆரம்பித்துள்ளார். இதில் கதாநாயகியாக ஸ்வேதா நடித்துள்ளார்.

நடிகர் விதார்த் மைனா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர். இவர் சில தோல்வி படங்களுக்குப் பிறகு கதையில் கவனம் செலுத்தி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க துவங்கியுள்ளார். இவரது நடிப்பில் வெளியான கிடாயின் கருணை மனு, குரங்கு பொம்மை போன்ற படங்கள் கலவையான வரவேற்பை பெற்றது. ஹிப் ஹாப் ஆதியின் அன்பறிவு படத்தில் விதார்த் வில்லனாக நடித்திருந்தார். லாந்தர் படத்திற்கு சந்தோஷ் நாராயணனின் அசோஸியேட் பிரவீன் இசையமைக்க உள்ளார். எம் சினிமா சார்பில் பத்ரி தயாரிக்கும் இந்த படம் சஸ்பென்ஸ் த்ரில்லரில் உருவாகிறது. இந்த படத்திற்கு ஞானசௌந்தர் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகின்றார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் தொடக்கவிழா சமீபத்தில் நடைபெற்றது.

இந்நிலையில், கதை மீது நம்பிக்கை வைத்து , தனது முதல்படம் வெளியாவதற்கு முன்பே லாந்தர் படத்தின் படப்பிடிப்பை தொடங்க தயாரிப்பாளர் பத்ரி உத்வேகம் கொடுத்ததாக, இயக்குனர் சஜிசலீம் நெகிழ்ச்சியாக கூறியுள்ளார். லாந்தர் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.