ஐக்கிய அரபு அமீரக அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து!

ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள அஜ்மான் நகரின் உயரமான அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் திடீர் தீ விபத்து; யாருக்கும் காயம் இல்லை என காவல்துறை தகவல். ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள அஜ்மான் நகரின் உயரமான அடுக்குமாடிக்…

ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள அஜ்மான் நகரின் உயரமான அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் திடீர் தீ விபத்து; யாருக்கும் காயம் இல்லை என காவல்துறை தகவல்.

ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள அஜ்மான் நகரின் உயரமான அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில், நேற்று நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட குடியிருப்பாளர்கள் செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் அஜ்மான் மற்றும் ஷார்ஜா எமிரேட்ஸில் உள்ள ஹோட்டல்களுக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் போக்குவரத்து ஆணையத்தால் ஏழு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அஜ்மன் ஒன் காம்ப்ளக்ஸ் என்ற குடியிருப்பு வளாகத்தில் அமைந்துள்ள இரண்டாவது கட்டடத்தில் இந்த விபத்து நேரிட்டதாக அஜ்மான் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. கட்டடத்தின் ஒரு மூலையில் தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்த விடியோவை அஜ்மான் காவல்துறை வெளியிட்டிருக்கிறது.

https://twitter.com/ajmanpoliceghq/status/1673474895454380034?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1673474895454380034%7Ctwgr%5E72ace8c353a8a2436e9d7445687247c84097a4d2%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.dinamani.com%2Fworld%2F2023%2Fjun%2F27%2Ffire-engulfs-highrise-in-united-arab-emirates-4028274.html

தீ விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்தில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஐக்கிய அரபு நகரங்களில் அண்மைக்காலமாக உயரமான அடுக்குமாடிக் குடியிருப்புகளில் தீ விபத்துகள் அதிகரித்து வருவது குறித்து உள்கட்டமைப்பு அமைச்சகம் புள்ளி விவரத்தோடு கவலை தெரிவித்திருந்த மூன்றாவது நாளில் இந்த தீ விபத்து நேரிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

– திருப்பதி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.