சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் இந்தியக் கடலோர காவல்படை சார்பில் தேடுதல் மற்றும் மீட்புப்பணி குறித்த ஒத்திகை 2ம் நாள் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
பெசன்ட் நகர் கடற்கரையைத் தொடர்ந்து மெரினா கடற்கரையிலும் இந்த நிகழ்ச்சியானது நடைபெற்றது. பேரிடர் காலங்களில் ஆபத்திலிருந்து பொது மக்களை மீட்பது குறித்தும், கடலில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர் மட்டும் கடலோர காவல்படை கப்பல் மற்றும் ரோப் மூலம் மீட்கும் பணியை எடுத்துரைக்கும் வகையில் இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை மெரினா கடற்கரையிலும் இந்திய கடலோர காவல் படையின் சார்பில் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் மெரினா கடற்கரையில் ஒத்திகை நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.
முன்னதாக, சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் இந்தியக் கடலோர காவல்படை சார்பில் தேடுதல் மற்றும் மீட்புப்பணி குறித்த ஒத்திகை நேற்றும் நடைபெற்றது.
கடற்கரைக்கு இளைஞர்களும், குழந்தைகளும் அதிக அளவில் வருகின்றனர். அவர்கள் குளிக்கும்போது சில நேரங்களில் ராட்சத அலைகளில் சிக்கி உயிரிழக்க நேரிடுகிறது.
அண்மையில் சென்னை திருவொற்றியூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர். இதேபோல் தமிழகமெங்கும் கடல் அலையில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து வருகிறது.
இதுபோன்ற உயிரிழப்புகளை தடுக்க போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்திக் கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் கடலில் தத்தளிப்பவர்களை எப்படி மீட்கும் என்பதை தத்ரூபமாக செய்து காட்டியது.








