அமைச்சர்களின் 2வது ஊழல் பட்டியல் தயார்! – மு.க. ஸ்டாலின்

அமைச்சர்களின் ஊழல்கள் அடங்கிய இரண்டாவது பட்டியலை, திமுக தயார் செய்து வருவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டத்தின் வாங்கல் குப்புச்சிபாளையம் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராம சபையில் பேசிய அவர்,…

அமைச்சர்களின் ஊழல்கள் அடங்கிய இரண்டாவது பட்டியலை, திமுக தயார் செய்து வருவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டத்தின் வாங்கல் குப்புச்சிபாளையம் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராம சபையில் பேசிய அவர், திமுக ஆட்சியில் ஜெயலலிதாவின் மர்ம மரணத்தின் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தருவதுதான் முதல் வேலையாக இருக்கும் என அறிவித்தார்., மன்னித்துவிடு மித்ரா என்று தனது பேத்திக்கு கடிதம் எழுதிவிட்டு, உயிரிழப்பு செய்துக் கொண்டுள்ள தூத்துக்குடி விவசாயியின் உயிரிழப்புதான், இன்றைய ஆட்சியில் வாழும் விவசாயிகளின் நிலைமையை எடுத்துக் காட்டுவதாகவும் ஸ்டாலின் கூறினார்.

மேலும், அதிமுக அமைச்சர்களின் ஊழல்கள் அடங்கிய இரண்டாவது பட்டியலை, திமுக தயார் செய்துவருவதாகவும், விரைவில் இந்த ஊழல் பட்டியல், ஆளுநரிடம் வழங்கப்பட உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply