“2K கிட்ஸ்.. 90ஸ் Mood-ல நாளைக்கு வரேன்” – இணையத்தில் வைரலாகும் #Simbu -வின் ட்வீட்!

நடிகர் சிம்பு அவரது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். தற்போது அது இணையத்தில் வைரலாகி வருகிறது. சிலம்பரசன் நடித்த `பத்து தல’ திரைப்படம் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து இயக்குனர்…

"2K Kids.. Coming tomorrow in 90s mood" - #Simbu's tweet going viral on the internet!

நடிகர் சிம்பு அவரது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். தற்போது அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிலம்பரசன் நடித்த `பத்து தல’ திரைப்படம் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து இயக்குனர் மணி ரத்னம் இயக்கியுள்ள தக் லைஃப் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். இதை தொடர்ந்து தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ள STR 48 திரைப்படத்தில் சிலம்பரசன் நடிக்கவுள்ளார். இப்படம் ஒரு பெரிய வரலாற்று பின்னணி கதைக்களத்துடன் உருவாகும் திரைப்படமாகும்.

இந்நிலையில் சிம்பு அவரது எக்ஸ் தளத்தில் நேற்று ஒரு பதிவு ஒன்றை பகிர்ந்தார். அது இணையத்தில் வைரலானது. அதில் அவர் “2000 களில் நடித்த படங்களான தம், மன்மதன், வல்லவன், விடிவி, இவையெல்லாம் சேர்த்து ஜென் சி மோடில் அப்படி இருக்க போறது நம்முடைய அடுத்த திரைப்படம்” என பதிவிட்டுள்ளார்.

அதைத்தொடர்ந்து தற்பொழுது அடுத்த பதிவை அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “டேய் 2கே கிட்ஸ், 90ஸ் மூட்ல நாளைக்கு 6.06 மணிக்கு ஷார்ப்பா வரேன்” என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இது எதைக் குறித்த அப்டேட் என எந்த தகவலும் இல்லை. இதனால் ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்ப்புடன் காத்துக் கொண்டுள்ளனர்.

இப்படம் அவரது 50- வது திரைப்படத்தை குறிக்கிறது அதை அவரே இயக்கவும் உள்ளார் என்ற செய்திகள் பரவி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.