பி.டி.உஷா சாதனையை முறியடித்து வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை – அன்புமணி வாழ்த்து!

பி.டி.உஷா சாதனையை முறியடித்து வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை வித்யாவுக்கு அன்புமணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மகளிர் 400 மீட்டர் தடை தாண்டி ஓடும் போட்டிகளில் தமிழக் வீராங்கனை வித்யா ராம்ராஜ் 54.75 வினாடிகளில் இலக்கை எட்டி வெண்கலப் பதக்கம் வென்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்காக அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

1984-ஆம் ஆண்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் அப்போதைய இந்திய வீராங்கனையும், இப்போதைய இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவருமான பி.டி.உஷா 55.42 வினாடிகளில் 400 மீட்டர் தொலைவை தடை தாண்டி கடந்தது தான் இந்திய தேசிய சாதனையாக இருந்தது. கடந்த 42 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்த பி.டி.உஷாவின் சாதனையை வித்யா முறியடித்திருப்பதற்கு எனது பாராட்டுகள்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வித்யா பங்கேற்கவுள்ள பிற போட்டிகளிலும் பதக்கம் வெல்ல வாழ்த்துகள்.”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.