2ஜி வழக்கில் சிபிஐ மேல்முறையீட்டு மனு – விசாரணைக்கு ஏற்பு!

2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த ஆ.ராசா, கனிமொழி மீதான வழக்கு விசாரணை மே மாதத்தில் இருந்து தொடங்கும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  2ஜி வழக்கில் கனிமொழி,  ஆ.ராசா உள்ளிட்ட 14  பேரையும் விடுவித்து சிபிஐ சிறப்பு…

2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த ஆ.ராசா, கனிமொழி மீதான வழக்கு விசாரணை மே மாதத்தில் இருந்து தொடங்கும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

2ஜி வழக்கில் கனிமொழி,  ஆ.ராசா உள்ளிட்ட 14  பேரையும் விடுவித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2017 ஆம் ஆண்டு உத்தரவிட்டது.  இதற்கு எதிராக சி.பி.ஐ., அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு அனுமதி மனுக்களை டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி தினேஷ் குமார் சர்மா விசாரித்து வருகிறார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி,  இந்த மனு மீதான தீர்ப்பை மறு தேதி குறிப்பிடாமல் கடந்த 14-ந் தேதி தள்ளி வைத்தது.  இந்த நிலையில், 2ஜி வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்த மேல்முறையீடு அனுமதி மீதான தீர்ப்பை டெல்லி உயர் நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு வெளியானது.

இந்நிலையில்,  2ஜி வழக்கில் சி.பி.ஐ மேல்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு ஏற்கலாம் என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், விசாரணை மே மாதத்தில் இருந்து தொடங்கும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.