தனக்கு பிடித்த யூடியூபரை காண 250 கி.மீ. சைக்கிள் பயணம் செய்த சிறுவன்!!

தனக்கு மிகவும் பிடித்த யூடியூப் பிரபலத்தை காண பஞ்சாப்பை சேர்ந்த சிறுவன் 250 கி.மீ. சைக்கிளில் பயணம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவைச் சேர்ந்த 13 வயது சிறுவன்,…

தனக்கு மிகவும் பிடித்த யூடியூப் பிரபலத்தை காண பஞ்சாப்பை சேர்ந்த சிறுவன் 250 கி.மீ. சைக்கிளில் பயணம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவைச் சேர்ந்த 13 வயது சிறுவன், தனக்கு மிகவும் பிடித்த யூடியூபரான நிச்சய் மல்ஹான்-ஐ சந்திக்கும் நோக்கில் வீட்டில் யாரிடமும் தெரிவிக்காமல் சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பியுள்ளார்.

இதை அறியாத சிறுவனின் பெற்றோர்கள் சிறுவனை காணவில்லை என்று அக்கம் பக்கத்தில் விசாரித்து தீவிரமாக தேடியுள்ளனர். எங்கு தேடியும் சிறுவன் கிடைக்காததால் பதற்றமடைந்த சிறுவனின் பெற்றோர்கள் அவனை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

சிறுவன் காணாமல் போனது குறித்து தகவல் தெரிந்ததும், துபாய் சென்றிருந்த யூடியூபர் நிச்சய் மல்ஹான், சிறுவன் குறித்த தகவல்களை சமூக வலைதளங்கள் வாயிலாக பகிர்ந்து தேடும் பணிகளில் ஈடுபட்டார். தொடர்ந்து 3 நாட்களாக 250 கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் பயணித்து டெல்லி சென்ற சிறுவனை பெற்றோரின் புகாரின் அடிப்படையில் போலீசார் பத்திரமாக மீட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.