தலைவாசல் அருகே பொன்னாளியம்மன் கோயில் ஆனித்தேரோட்டம்!

ஆத்தூர் தலைவாசல் அருகே  பொன்னாளியம்மன் கோயிலில் 25 வருடங்களுக்கு பிறகு நடைபெற்ற ஆனித்தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். சேலம் மாவட்டம் வீரகனூர் அருகே உள்ள சொக்கனூர் பச்சமலை அடிவாரத்தில் 100…

ஆத்தூர் தலைவாசல் அருகே  பொன்னாளியம்மன் கோயிலில் 25 வருடங்களுக்கு பிறகு நடைபெற்ற ஆனித்தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சேலம் மாவட்டம் வீரகனூர் அருகே உள்ள சொக்கனூர் பச்சமலை அடிவாரத்தில்
100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு பொன்னாளியம்மன் கோயில் உள்ளது.
இக்கோயிலில் பல்வேறு காரணங்களால் 25 ஆண்டுகளாக தேர்த்திருவிழா நடைபெறாமல் இருந்து வந்தது. இந்நிலையில் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 5ம் தேதி பூச்சொரிதலுடன் தேர்த்திருவிழா தொடங்கியது, பினன்ர் அம்மனுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்தும் தீச்சட்டி ஏந்தியும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தும் வழிபட்டு வந்தனர்.

இதனைதொடர்ந்து  11ம் நாளாம் திருவிழாவில்  பொன்னாளியம்மன் கோயில் ஆனித் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இரண்டு தேர்களில் மாரியம்மன், செல்லியம்மன், பொன்னாளியம்மன் சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தபடி தேரோடும் வீதிகள் வழியாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெண்களும் தேரை வடம் பிடித்து இழுத்து சென்று நேர்த்திக்கடன் செலுத்தினார்.

மேலும் 25 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற இந்த தேரோட்டத்தில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என் நேரு உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ரூபி.காமராஜ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.