Modi மற்றும் Maddy உடன் செல்ஃபி எடுத்த பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் – வைரலாகும் புகைப்படங்கள்!

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நடிகர் மாதவன் ஆகியோருடன் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் ஆகியோருடன் எடுத்துக் கொண்ட ‘செல்ஃபி’ புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி 13,14…

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நடிகர் மாதவன் ஆகியோருடன் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் ஆகியோருடன் எடுத்துக் கொண்ட ‘செல்ஃபி’ புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி 13,14 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்றிருந்தார். அப்போது 14-ந் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக மோடி பங்கேற்றார்.அதை தொடர்ந்து, அன்று இரவு பாரீசில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், பிரதமர் மோடிக்கு, இரவு விருந்து விருந்தளித்தார். இந்த விருந்தில் பிரான்ஸ் மற்றும் இந்திய உணவுகள் பரிமாறப்பட்டன.

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கொடுத்த இந்த விருந்தில் நடிகர் மாதவனும் கலந்து கொண்டார். அப்போது இமானுவேல் மேக்ரான், மோடி ஆகிய இருவரும் உணவருந்திக் கொண்டிருந்த போது, அங்கு சென்ற மாதவன், இருவருடனும் செல்பி எடுக்க வேண்டும் என தனது விருப்பத்தை தெரிவிக்க, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானும் அதற்கு உடனே ஓகே சொன்னதுடன் மட்டும் அல்லாமல், மாதவனின் போனை வாங்கி தானே செல்பி எடுத்துள்ளார்.

அப்போது பிரதமர் மோடி மற்றும் நடிகர் மாதவன் இருவரும் மேக்ரானின் செல்பிக்கு போஸ் கொடுக்க அழகிய புகைப்படங்களை எடுத்துள்ளார். அந்த அழகிய தருணங்களால் மிகவும் உற்சாகமான மாதவன், இமானுவேல் மேக்ரான் எடுத்த செல்பி புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

அதுமட்டுமின்றி இந்த புகைப்படம் குறித்த தனது கருத்துகளையும் பகிர்ந்துள்ளார். அதில் பிரதமர் மோடி மற்றும் இமானுவேல் மேக்ரான் உடன் செல்பி எடுத்த இந்த தருணம் என்றென்றும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு தருணம். இது என்றென்றும் என் மனதில் இடம் பெற்றிருக்கும். இந்த இருபெரும் தலைவர்களின் பணிவும், அன்பும் நம்பமுடியாத பாடத்தை கற்றுத்தந்தது. பிரான்ஸ் – இந்தியா இந்த இருநாடுகளுக்கு இடையேயான உறவு என்றென்றும் செழிக்கட்டும் என நடிகர் மாதவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சி உடன் பதிவிட்டுள்ளார். மாதவன் பகிர்ந்த இந்த புகைப்படத்திற்கு லட்சக்கணக்கில் லைக்குகள் குவிந்து வருவதோடு, தற்போது அனைவராலும் வேகமாக பகிரப்பட்டும் வருகிறது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.