#Crime – போரூர் அருகே பெண்ணின் முகத்தில் மயக்கமருந்து அடித்து 25 பவுன் நகை கொள்ளை!

போரூர் அருகே பெண்ணின் முகத்தில் மயக்க மருந்து அடித்து 25 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை போரூரை அடுத்த காரம்பாக்கம் விஸ்வநாதன் தெருவை சேர்ந்தவர் சாந்தி (50).இவருக்கு சொந்தமான…

25 pounds of jewelery was stolen from a woman near Borur with anesthetic on her face!

போரூர் அருகே பெண்ணின் முகத்தில் மயக்க மருந்து அடித்து 25 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை போரூரை அடுத்த காரம்பாக்கம் விஸ்வநாதன் தெருவை சேர்ந்தவர் சாந்தி (50).
இவருக்கு சொந்தமான வீட்டின் தரைத் தளத்தில் இவர் தனியாக வசித்து வந்தார். முதல்
தளம் , மற்றும் இரண்டாம் தளங்களை வாடகைக்கு விட்டு உள்ளார். இந்த வீட்டிற்கு பாதுகாப்பு சுற்றுசுவர் மற்றும் கேட் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் வீட்டின் கதவின் முன்பக்கம் கிரில் கேட் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வீட்டில் எளிதில் நுழைய முடியாது. அந்த அளவிற்கு பாதுகாப்பாக வீடு அமைந்துள்ளது.

இந்த நிலையில் இன்று அதிகாலை வீட்டின் வெளிகேட் திறந்து இருந்தபோது மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து, வீட்டின் காலிங் பெல்லை அழுத்தி உள்ளனர். சாந்தி வீட்டின் உள்ளே இருந்து கதவை திறந்து, பின்னர் இரும்பு கிரில் கேட்டை திறந்து உள்ளார். அப்போது மர்ம நபர்கள் சாந்தியின் வாயை பொத்தி, மயக்க மருந்தை அடித்துள்ளனர். தொடர்ந்து கை, கால்களைக் கட்டி அவர் அணிந்திருந்த 10 சவரன் நகை மற்றும் பீரோவில் இருந்த 15 சவரன்
நகைகள் என மொத்தம் 25 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

வீட்டின் முதல் தளத்தில் உள்ளவர்கள் சாந்தியின் வீடு திறந்து கிடப்பதைக் கண்டு
உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது சாந்தி கை,கால்கள் கட்டப்பட்டு மயக்க நிலையில் இருந்ததை பார்த்துள்ளனர். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், கட்டை அவிழ்த்து சாந்திக்கு முதலுதவி அளித்துள்ளனர். தொடர்ந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வளசரவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல்
அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு
கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக
வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.