முக்கியச் செய்திகள் தமிழகம்

24 மணி நேரமும் செயல்படும் தடுப்பூசி மையங்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் நாளை முதல் 24 மணிநேரமும் கொரோனா தடுப்பூசி மையம் செயல்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் முதன்முறையாக  சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் அமைந்துள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குனரகத்தில், 24 மணி நேரம் இயங்கும் தடுப்பூசி மையத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்விற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்,
தமிழ்நாட்டில் முதன் முறையாக புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து மாற்று திறனாளிகளுக்கும் அரியலூரில் அனைத்து கர்ப்பிணிப் பெண்களுக்கும் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நாளை காலை சென்னையில் உள்ள 80 வயதிற்கு மேற்பட்டோருக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளதாகவும் தெரிவித்த அவர், நாளை மறுநாள் சென்னையில் இருக்கும் அரசு பொது மருத்துவமனைகளிலும் 24 மணி நேரமும் செயல்படும் தடுப்பூசி மையம் திட்டம் தொடங்கப்பட உள்ளதாகவும், அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளிலும் இத்திட்டம் தொடங்கப்பட்ட உள்ளதாகவும் தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

14 ஆண்டுகள் தண்டனை பெற்ற கைதிகளை விடுவிக்க மாநில அரசுக்கு அதிகாரம்

Halley karthi

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரபல மலையாள நடிகை மரணம்

Jeba Arul Robinson

மின்சாரத்துறை நிதிநிலைமையில் பீகார் மாநிலத்தை விட தமிழ்நாடு மோசமாக உள்ளது – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

Jeba Arul Robinson