முக்கியச் செய்திகள் தமிழகம்

எவ்வளவு இழப்பு ஏற்பட்டாலும் பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது: அமைச்சர் 

அரசுக்கு எவ்வளவு இழப்பு ஏற்பட்டாலும், பேருந்து கட்டணம் உயர்த்தப்படமாட்டாது என போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். 

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள திணைக்குளம் கிராமத்தில் 26 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாயக் கூடத்தை போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்  திறந்து வைத்தார்.   12 புதிய வழித்தடங்களில் அரசு பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், தமிழ்நாட்டில், நிறுத்தப்பட்ட அனைத்து பேருந்துகளும் தற்போது இயக்கப்பட்டு வருவதாகவும், தற்போது, 16 ஆயிரத்து 650 பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

போக்குவரத்துத் துறையும், மின்சார துறையும் நஷ்டத்தில் இயங்கி வந்தாலும், மக்கள் சேவை என்பதால், தொடர்ந்து முதலமைச்சர் உதவிக்கரம் நீட்டி வருவதாக தெரிவித்தார். எவ்வளவு நஷ்டம் வந்தாலும் பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது என்றும், மக்கள் மீது சுமையை சுமத்த மாட்டோம் என்றும் குறிப்பிட்டார்.

போக்குவரத்துத் துறையில் வாரிசுதாரர்களுக்கு காலியாக உள்ள  கருணை அடிப்படையிலான பணிகள் விரைவில் நிரப்பப்படும் என்றும்,  பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பிறகு முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி, இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரிப்பு 

Ezhilarasan

ஓமலூரில் முதல்வர் பழனிசாமி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை

Gayathri Venkatesan

கடைசி நேரத்தில் டோக்கியோ பறந்த இந்திய வீராங்கனை

Saravana Kumar