தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2,312 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 783 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 2,312 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை கொரோனாவால் 25 லட்சத்து 31 ஆயிரத்து 118 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றில் இருந்து 2 ஆயிரத்து 986 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 24 லட்சத்து 68 ஆயிரத்து 236 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதே நேரத்தில், பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 46 பேர் உயிரிழந் துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆயிரத்து 652 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் புதிதாக 144 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரோட்டில் 152 பேருக்கும் சேலத்தில் 168 பேருக்கும் கோவையில் 252 பேருக்கும் புதிதாகத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.







