#IPL2026 | மும்பையை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி!

மும்பையை வீழ்த்தி 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது. 10 அணிகள் இடையிலான 19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதனிடையே நேற்று 20வது லீக் ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை அணியும், ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு அணி மோதியது. மும்பை மைதானத்தில் நேற்று இரவு 7.30 மணிக்கு ஆட்டம் தொடங்கியது.

இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த பெங்களூரு அணிக்கு பில் சால்ட் மற்றும் விராட் கோலி ஜோடி சிறப்பான துவக்கம் கொடுத்தது. இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 240 ரன்களை குவித்தது.

இதனை தொடர்ந்து ஆடிய மும்பை அணிக்கு ரிக்கில்டன் 22 பந்துகளில் 37 ரன்கள், ரோகித் சர்மா 13 பந்துகளில் 19 ரன்கள், சூர்யகுமார் யாதவ் 22 பந்துகளில் 33 ரன்கள் குவித்தது. போட்டி முடிவில் மும்பை அணி 5 விக்கெட் இழப்புக்கு 222 ரன்களை எடுத்தது. இதன் காரணமாக பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.