சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ரூ.38,672க்கு விற்பனை

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.272 உயர்ந்து, ரூ.38,672க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இதனால், தங்கம் வாங்குவோர் மத்தியில் அவ்வப்போது…

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.272 உயர்ந்து, ரூ.38,672க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இதனால், தங்கம் வாங்குவோர் மத்தியில் அவ்வப்போது மகிழ்ச்சியும், ஏமாற்றமும் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. கடந்த சில தினங்களாக சற்றே ஏறுமுகத்தில் இருக்கும் தங்கத்தின் விலை காரணமாக மக்கள் அனைவரும் ஏமாற்றத்தில் உள்ளனர். மார்ச் 26-ஆம் தேதி சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 38,752 ஆக விற்பனையானது.

அண்மைச் செய்தி: ‘சோழன் To பல்லவன்- சா.சி.சிவசங்கர் அமைச்சரான கதை’

தொடர்ந்து கடந்த திங்களன்று சவரனுக்கு 224 ரூபாய் குறைந்து முப்பத்தி 38,608 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த நிலையில் சென்னையில் தங்கத்தின் விலை நேற்று 24 ரூபாய் உயர்ந்து 38,344 ரூபாய்க்கு விற்பனையானது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலை சவரனுக்கு ரூ.272 உயர்ந்து, ரூ.38,672க்கு விற்பனையாகிவருகிறது.

தங்கத்தின் விலை, தொடர்ந்து உயர்ந்து வருவதால் இன்னும் சில நாட்களில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 40,000 கடந்துவிடும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகின்றது. அதேநேரம், விலை ஏற்றம் தொடர்வதால் மக்கள் தற்போதே தங்கத்தை வாங்கி சேகரிக்கவும் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.