முக்கியச் செய்திகள் தமிழகம்

20,453 குடியிருப்புகளை இடிக்க வேண்டும்: தொழில்நுட்ப வல்லுநர் குழு

22,271 குடியிருப்புகளில் ஆய்வு செய்த பின் 20,453 குடியிருப்புகளை இடிக்க வேண்டும் என அறிக்கையை தாக்கல் செய்துள்ளது தொழில்நுட்ப வல்லுநர் குழு.

சென்னை திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் உள்ள கிராமத்தெரு குடிசைமாற்று வாரிய கட்டடம் உள்ளது. இங்குள்ள D பிளாக் கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டதையடுத்து, அங்கிருந்த மக்கள் அனைவரும் வீடுகளில் இருந்து வெளியேறினர். இந்நிலையில், கட்டடத்தில் ஏற்பட்ட விரிசல் அதிகமாகி கட்டடம் இடிந்து தரை மட்டமானது.

மக்கள் முன்கூட்டியே வெளியேறியதால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. இதுகுறித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன், இடிந்து விழுந்த கட்டடம், பழமையான கட்டடம் எனவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக அரசு தேவையான உதவிகளை செய்யும் எனவும் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள குடியிருப்புகளை ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டது. தற்போது, அந்த தொழில்நுட்ப வல்லுநர் குழு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திடம் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. 25 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள 123 திட்டங்களில் 22,271 குடியிருப்புகளில் அண்ணா பல்கலைக்கழக தொழில்நுட்ப வல்லுநர் குழு ஆய்வு மேற்கொண்டது. அதில், 20,453 குடியிருப்புகளை இடிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தது.

22,271 குடியிருப்புகளில் 20,453 குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதால், அவற்றை உடனடியாக இடித்து மறுகட்டுமானம் மேற்கொள்ள வேண்டும் என்று தொழில்நுட்ப வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

2022-2023ம் ஆண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட் நாளை தாக்கல்!

Janani

டெல்டா வைரஸ்: மீண்டும் முகக்கவசம் அணிய இஸ்ரேல் அரசு உத்தரவு

சிவகங்கை மாவட்டத்தில் 1500 ஏக்கர் நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசம்

Ezhilarasan