முக்கியச் செய்திகள் தமிழகம்

பிரதமர் மோடி ஆட்சி பற்றி 2024 தேர்தலில் தெரியும்-எம்.பி. சுரேஷ் கோபி

பிரதமர் மோடி ஆட்சி பற்றி 2024 தேர்தலில் தெரியும் என்று பாஜக சார்பில் நடந்த ஓணம்
பண்டிகை கொண்டாட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் கோபி தெரிவித்தார்.

பிரதமர் மோடியின் 72-வது பிறந்தநாளையொட்டி நாடு முழுவதும் பாஜக சார்பில்
அடுத்த 15 நாட்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதில் ஒரு பகுதியாக சென்னை சேத்துப்பட்டு பகுதியில் உள்ள மலையாளி கிளப்பில்
பாரதிய ஜனதா கட்சி, இதர மொழி பிரிவு சார்பில் ஓணம் கொண்டாட்டம் நடைபெறுகிறது.
அதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மலையாள சூப்பர்
ஸ்டார் சுரேஷ் கோபி கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் மலையாளிகளின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் செண்ட மேளம்
முழங்க நடைபெற்றன. தொடர்ந்து பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 5
நபர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டன

தொழிலதிபர் கல்பாக்க கோபாலன், கின்னஸ் சாதனை படைத்தவரும் நடிகையுமான ஷீலா,
தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்கும் சமூக ஆர்வலர் சிவா, சிறப்பு
குழந்தைகளுக்கான பள்ளி நடத்தும் பெண்கள் சுலதா அஜித், லட்சுமி கிருஷ்ணகுமார்,
ஹோமியோபதி மருத்துவர் மற்றும் சமூக ஆர்வலர் விஜயலட்சுமி உள்ளிட்டவர்களுக்கு
விருதுகள் வழங்கப்பட்டு சிறப்பு செய்யப்பட்டது.

பின்னர் மேடையில் பேசிய சுரேஷ் கோபி, “இந்த நாட்டை பிரதமர் மோடி நிர்வாகத் திறமையுடன் கொண்டு செல்கிறார். ஏழைகளுக்காக ஜன்தன் யோஜனா திட்டத்தை கொண்டு வந்து, அனைத்து மக்களும் வங்கி பரிவர்த்தனையை மேற்கொள்ள செய்துள்ளார்.
ஜன்தன் திட்டம் குறித்து பலரும் விமர்சித்தனர். ஆனால் அந்த திட்டம் தற்போது
வெற்றி பெற்றுள்ளது. அவரது நிர்வாகத் திறமையை பார்த்து நான் வியக்கிறேன்.

பெட்ரோல், டீசல் விலையேற்றமானது சர்வதேச எண்ணெய் நிறுவனங்களின் பரிவர்த்தனைகளை பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது. தனி மனித, குடும்ப வருமானம் உயர்ந்துள்ளது. முன்பெல்லாம் சாலைகள் மேடுபள்ளமாக இருந்தன. தற்போது நாட்டில் சிறப்பான சாலை வசதி ஏற்படுத்தி உள்ளதன் மூலம் செல்ல வேண்டிய இடத்திற்கு முன்னதாகவும், அதன் வாயிலாக வாகனத்திற்கான மாதாந்திர எரிபொருள் செலவும் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது”, என்றார். 

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “என்னால் நடிக்க முடிகிற கதாபாத்திரம் வந்தால் நிச்சியம் தமிழ் சினிமாவில் நடிப்பேன். பல கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறேன். அதுபற்றி தெரியாமல் எதுவும் பேசக்கூடாது. பலர் அப்படி தான் பேசுகிறார்கள்.

நரேந்திர மோடியின் ஆட்சி எப்படி இருக்கிறது என்று 2024 தேர்தல் சொல்லும்” என்றார்.

நிகழ்ச்சியின் போது ஓணம் பண்டிகையை கொண்டாடும் விதமாக அத்தப்பூ கோலமிட்டும்,
திருவாதிரை களி நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நாட்டில் புதிதாக 33,750 பேருக்கு கொரோனா தொற்று!

Arivazhagan Chinnasamy

“ஒட்டுமொத்த காட்டையே அறுக்கும் ரம்பம் தேசத் துரோக வழக்கு”

Arivazhagan Chinnasamy

மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூர கல்வியில் முறைகேடு: 8 பேர் மீது வழக்குப்பதிவு

EZHILARASAN D